வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க காலக்கெடு இல்லை: தேர்தல் ஆணையம்

Tamil_Daily_News_91146051884வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேர்தல் அதிகாரி கூறுகையில், “2015ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரையிலான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை 5 கோடியே 62 லட்சத்து 5 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது தாலுகா, மண்டல அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்களில் புதிய வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் பார்த்து, தங்களது பெயர் உள்ளதா என்று பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.

அதேபோன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அல்லது புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்களுக்கு எந்தவித காலக்கெடுவும் கிடையாது. அலுவலக நாட்களில் தாலுகா, மண்டல, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் உதவி தேர்தல் அதிகாரியிடம் படிவம் 6ஐ பெற்று புதிதாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஒரு மாதத்தில் புதிய வண்ண அடையாள அட்டை கிடைக்கும். http://www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top