அணியின் மாற்று கீப்பராக நீடிக்கிறார் தோனி: கோலி

கோலிசிட்னியில் நடைபெறவுள்ள 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், மகேந்திர சிங் தோனி மாற்று விக்கெட் கீப்பராக நீடிப்பதாக, இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தற்போதைக்கு இந்திய அணியின் மாற்று விக்கெட் கீப்பராக தோனி உள்ளார். சாஹாவுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் தோனி அணியில் இடம்பிடிப்பார்.

தற்போது சாஹா முழு உடல் திறனுடன் உள்ளார். ஆனால், ஒருவேளை ஏதாவது காயமோ அல்லது திடீர் உடல்நலக் குறைவோ ஏற்பட்டுவிட்டால், அவருக்கு பதிலாக தோனி களமிறங்குவார்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top