தனிநாடு அந்தஸ்து கோரிக்கை: ஜோர்டானுடன் பாலஸ்தீன அதிபர் ஆலோசனை!

பாலஸ்தீன அதிபர் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கக்கோரும் தீர்மானத்தை மீண்டும் ஐநா பாதுகாப்பு அவையில் சமர்ப்பிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அதிபர் மொகம்மது அப்பாஸ் கூறியுள்ளார்.

ஜோர்டானோடு இது தொடர்பாக விவாதித்து வருவதாக தெரிவித்த அப்பாஸ், தாங்கள் தோற்கவில்லை என்றும், பாதுகாப்பு கவுன்சிலை மீண்டும் நாடுவதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டார். 2017 ஆம் ஆண்டிற்குள் இஸ்ரேல் ஆக்ரமித்துள்ள பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பாலஸ்தீனத்தை சுதந்தர நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த செவ்வாயன்று தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

பாதுகாப்பு கவன்சிலின் நிரந்தர உறுப்பு நாடான அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரிப்பதில் உறுதியாக உள்ள நிலையில் மீண்டும் பாலஸ்தீனத்திற்கு தோல்வியே கிடைக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் அந்நாட்டின் அதிபர் அப்பாஸோ, தீர்மானம் நிறைவேறும் வரையில் முயற்சியைக் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top