கேரளாவில் அணைகட்டும் பணிகள் துவக்கம்: தமிழக விவசாயிகள் எதிர்ப்பு!

Oommen_Chandy_umman chandiபாம்பாற்றின் குறுக்கே அணைக்கட்டுவதற்கு தென்மண்டல புவியியல் துறை அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து, அணை கட்டுவதற்கான பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாம்பாற்றில் இருந்து வரும் தண்ணீரே அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக இருக்கும் நிலையில், பாம்பாற்றின் குறுக்கே கேரளா அணை கட்டினால் நீர்வரத்து முற்றிலும் பாதிக்கப்படும் என தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 50 ஏக்கர் விளைநிலங்களின் பாசன தேவையையும், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் குடிநீர் தேவையையும் அமராவதி அணை பூர்த்தி செய்து வருகிறது.

இந்த நிலையில், பாம்பாற்றின் குறுக்கே அணைக்கட்டினால் திருப்பூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கும் என்பது விவசாயிகளின் கருத்து. மேலும், பாசன வசதி பெறும் தமிழக அரசுடன் எவ்வித ஆலோசனையிலும் ஈடுபடாமல், கேரள அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top