டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: தோனிக்கு முன்னாள் வீரர்கள் பாராட்டு!

dhoniடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி விடைபெற்றது குறித்து இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:-

சச்சின் தெண்டுல்கர் (இந்தியா): நான் விளையாடிய கேப்டன்களிலேயே தோனி தான் சிறந்த கேப்டன். இருவரும் இணைந்து உற்சாகமாக விளையாடி இருக்கிறோம். அற்புதமான டெஸ்ட் வாழ்க்கையை பெற்ற அவருக்கு பாராட்டுகள். எனது நண்பரின் அடுத்த இலக்கு 2015-ம் ஆண்டு உலக கோப்பை தான்.

சுனில் கவாஸ்கர்: நான் சாகும் போது கடைசி ஆசை என்ன என்று கேட்டால், 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் தோனி விளாசிய அந்த வெற்றிக்குரிய சிக்சரை பார்க்க வேண்டும் என்று கூறுவேன்.

டெஸ்ட் ஓய்வு முடிவு ஆச்சரியம் அளிக்கிறது. சிட்னி டெஸ்டுடன் கேப்டன் பதவியில் இருந்து விலகி விட்டு, 2 அல்லது 3 ஆண்டுகள் ஒரு டெஸ்ட் வீரராக நீடிப்பார் என்று நினைத்தேன்.

சவுரவ் கங்குலி (இந்தியா): தோனியின் விலகல் முடிவு எதிர்பார்த்தது தான். ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக தோனி விளங்குகிறார்.

கபில்தேவ் (இந்தியா): தோனி எனது ஹீரோ. தெண்டுல்கர், ஷேவாக் பற்றி நாம் நிறைய பேசுகிறோம். அவர்களை போன்று திறமை படைத்தவர்களில் தோனியும் ஒருவர்.

வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா): கடினமான கட்டத்தில், முடிவுகளை மிக எளிதாக எடுப்பதில் ஈடுஇணையற்றவர். அதிகமாக உணர்ச்சிவசப்படமாட்டார். அது தான் அவரது தனித்திறமை. தோனி போன்றவர் கேப்டனாக கிடைத்தது இந்திய அணியின் அதிர்ஷ்டம்.

இயான் பிஷப் (வெஸ்ட் இண்டீஸ்): கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்றால், அப்போது நெருக்கடி பந்து வீச்சாளர்களுக்கு தான் இருக்குமே தவிர, தோனிக்கு அல்ல.

மைக்கேல் வாகன் (இங்கிலாந்து): உலக கிரிக்கெட்டில் பெரும்பான நேரத்தில் நிதானத்தை இழக்காத அமைதியான ஒரு மனிதர் தோனி. சரியான நேரத்தில் கேப்டன் பதவி கோலி வசம் செல்கிறது.

ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா): மிகச்சிறந்த போட்டியாளர். இந்திய கிரிக்கெட் அவருக்கு நிறைய நன்றி கடன்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

ராகுல் டிராவிட் (இந்தியா): முன்னுதாரணமான ஒரு அணித்தலைவர் தோனி. அணியை வழிநடத்துவதிலும், திறமையை வெளிப்படுத்துவதிலும் எப்போதும் சரியான கலவையில் இருப்பவர்.

சுரேஷ் ரெய்னா: அணியை வழிநடத்தும்போது தைரியமான அணித்தலைவராக இருந்தீர்கள். இப்போது தைரியமான முடிவு எடுத்து வெளியேறுகிறீர்கள்.

ரவீந்திர ஜடேஜா: பேட்டிங்கில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால், தோனியுடன் இணைந்து பேட் செய்யுங்கள்.

குண்டப்பா விஸ்வநாத் (இந்தியா): இந்தியா உருவாக்கிய சிறந்த கேப்டன் களில் தோனியும் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

எரபள்ளி பிரசன்னா: பொதுவாக ஒரு தொடர் முடிந்த பிறகு தான் கேப்டன்கள் ஓய்வு முடிவை அறிவிப்பது வழக்கம். தோனியும் அப்படி செய்திருக்கலாம்.

சர்பானந்தா சோனோவல் (மத்திய விளையாட்டுத்துறை மந்திரி): இந்திய கிரிக்கெட்டுக்கு இது மிகப்பெரிய நாள். தோனியின் ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் விளையாட்டுக்கு அளித்த பங்களிப்பு ஒவ்வொரு இந்தியனும் மதிக்கக்கூடியதாக இருக்கும். இளம் வீரர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும் அவரை நினைத்து பெருமிதம் அடைகிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top