டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

CRICKET-ENG-IND_Mahendra Singh Dhoni டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்ட செய்தியில், ‘இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை அடைந்தது. தற்போது அவர் மற்ற போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் போட்டியிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறார்’ என்று கூறியுள்ளது.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தோனி கவனம் செலுத்த இருப்பதாகவும் அதனால் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

தோனியின் இந்த முடிவை ஏற்பதாக அறிவித்த கிரிக்கெட் வாரியம், டெஸ்ட் போட்டியில் அவரது மகத்தான பங்களிப்பிற்காக நன்றியும் கூறியுள்ளது.

தோனி ஓய்வு பெறுவதால் ஆஸ்திரேலியாவில் எஞ்சியிருக்கும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பார் என்றும் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 4876 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top