தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல்!

C19BUS6போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக, தமிழகம் முழுவதும் 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் நேற்று மட்டும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 221 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று போராட்டம் நடத்திய 94 போக்குவரத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் 10 அரசுப் பேருந்துகள் தாக்குதலுக்கு உள்ளாகின.

திருவண்ணாமலையில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கும்பகோணத்தில் வெவ்வேறு பகுதிகளில் 4 பேருந்துகளின் கண்ணாடிகள் அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டன. சிவகங்கையில் பேருந்துகள் மீது கல்வீசி கண்ணாடிகளை உடைத்த 2 நடத்துனர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல்லில் அரசுப் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top