2-வது டெஸ்ட் போட்டி : மெக்குல்லம் சதத்தால் நியூசிலாந்து முன்னிலை!

2-வது டெஸ்ட் போட்டிவெலிங்டனில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் மெக்குல்லம் சதம் அடித்தார். நியூசிலாந்து அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்து 6 ரன் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 192 ரன்னில் சுருண்டது. ஆனால், இந்திய அணி 438 ரன்கள் குவித்தது. ரஹானே அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். தொடக்க வீரர் தவான் 98 ரன்னும், கேப்டன் டோனி 68 ரன்னும் எடுத்தனர்.

246 ரன்கள் பின்தங்கியிருந்த நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை விளையாடிது. தொடக்க வீரர் புல்டன் ஒரு ரன்னில் ஆட்டம் இழக்க, பின்னர் வந்த வில்லியம்சன் 7 ரன்னில் வெளியேறினார். 35 ரன்னில் ரூதர்போர்டு வெளியேற, பின்னர் வந்த லதம் 29 ரன்னில் வீழ்ந்தார்.

இதைத் தொடர்ந்து மெக்குல்லம்- ஆண்டர்சன் ஜோடி விளையாடியது. ஆனால், ஆண்டர்சன் 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். 87 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த நியூசிலாந்து அணியை மெக்குல்லம்-வாட்லிங் ஜோடி தூக்கி நிறுத்தியது.

அபாரமாக விளையாடி வரும் மெக்குல்லம் தனது 9வது சதத்தை நிறைவு செய்தார். வாட்லிங் தனது 7வது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது. நாளை 4வது நாள் ஆட்டம் தொடர்கிறது.

மெக்குல்லம் 114 ரன்னிலும், வாட்லிங் 52 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இந்தியாவை விட 6 ரன்கள் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top