காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடையும்: வானிலை ஆய்வுமையம் தகவல்!

வானிலை மையம்இலங்கையின் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணிநேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top