ஜார்க்கண்ட் முதல்வராக ரகுபர் தாஸ் தேர்வு!

Raghubar_Das_PTI_650பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக, ரகுபர் தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தலைமையில் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரகுபர் தாஸை சட்டமன்ற பாரதிய ஜனதா கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

ரகுபர்தாஸ் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வராக பதவியேற்க உள்ள பழங்குடி இனத்தவரல்லாத முதல் தலைவர் ஆவார். பாரதிய ஜனதா சார்பில் முதலமைச்சராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர்கள் அர்ஜூன் முண்டாவும், பாபுலால் மராண்டியும் தேர்தலில் தோல்வியடைந்ததால், ரகுபர் தாஸ் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 81 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி 42 இடங்களைப் பிடித்து ஆட்சியமைத்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top