காஷ்மீரில் புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி!

omar-abdullahஜம்மு-காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. பாரதிய ஜனதாவுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்று, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைப்பது தொடர்பாக தேசிய மாநாட்டு கட்சியுடன் பாரதிய ஜனதா ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா நேற்று ஒரே நாளில் இரண்டு முறை மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாரதிய ஜனதாவையும், தேசிய மாநாட்டு கட்சியையும் சுற்றி ஏராளமான செய்திகள் உலவி வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள அவர், பாரதிய ஜனதாவுடன் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை என்றும் எந்தவித ஆலோசனையும் நடைபெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள மக்கள் ஜனநாயக கட்சியுடன் ஆட்சியமைப்பது தொடர்பாக, பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்க 44 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பாரதிய ஜனதாவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரசுக்கு 12 இடங்களும் உள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top