பொள்ளாச்சி விடுதி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்!

highcourtபொள்ளாச்சியில் தனியார் விடுதியில் தங்கி பயின்ற 2 சிறுமிகள் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு கோவை மகளிர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மேலும் தனியார் விடுதி, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் எனறும், அவ்வாறு வழங்க தவறினால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையம் நிலையம் அருகே செயல்பட்டு வந்த தனியார் விடுதியில் தங்கியிருந்த 2 சிறுமிகள், கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி இரவு, விடுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

இந்த கொடூரம் தொடர்பாக பொள்ளாச்சியைச் சேர்ந்த வீராசாமி என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பொள்ளாச்சி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த மாதம் 27 ஆம் தேதி கோவை மகளிர் நீதி மன்றத்தில் வீராசாமி ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கோவை மகளிர் நீதி மன்றம் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியும், அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top