டி.ஆர்.எஸ். முறையை ஏற்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு!

Cricket_India_Crest.svgஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் சில முடிவுகள் இந்தியாவுக்கு பாதகமாக அமைந்ததால் நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். முறையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர்.

இது பற்றி இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நடைமுறையில் உள்ள தற்போதைய டி.ஆர்.எஸ். முறை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. இதில் பந்து எந்த திசையில், எப்படி விலகி செல்கிறது என்பதை கண்டறியும் தொழில்நுட்பத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

நாங்கள் சொல்லும் சில மாற்றங்களை ஐ.சி.சி. செய்து அது ஏறக்குறைய துல்லியமாக இருக்கிறது என்று உறுதியானால் மட்டுமே டி.ஆர்.எஸ். முறையை ஏற்றுக்கொள்வோம்’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top