2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை 2015 ஜூன் 30க்குள் வங்கிகளில் மாற்றலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

reserve bankஅச்சிடப்பட்ட ஆண்டு இடம்பெறாத, 2005ம் ஆண்டுக்கு முந்தைய 500 ரூபாய் 1000 ரூபாய் உள்ளிட்ட கரன்சி நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கான அவகாசத்தை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. அதன்படி, இதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டுக்களில், அச்சிட்ட ஆண்டு இடம்பெற்றுள்ளது. அது இடம்பெறாத, 2005க்கு முந்தைய 500 மற்றும் 1000 ரூபாய் உள்ளிட்ட கரன்சி நோட்டுக்களை வங்கிகள் மூலம் திரும்பப் பெறுவதற்கு கடந்த ஜனவரி 22ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி வரை அளித்திருந்த அவகாசத்தை 2015 ஜனவரி 1ம் தேதியாக ரிசர்வ் வங்கி நீட்டித்திருந்தது. அதையும் இப்போது மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top