நயன்தாரா என் தோழி, ஹன்சிகாதான் என் காதலி : சிம்பு

simbuநயன்தாரா என் தோழி, ஹன்சிகாதான் என் காதலி என்று கூறியுள்ளார் சிம்பு.சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். தற்போது அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் வந்துள்ளன.

ஏற்கனவே காதலித்த நயன்தாராவை தனது புதுப்படத்தில் ஜோடியாக சிம்பு சேர்த்துள்ளதால் ஹன்சிகா மனம் உடைந்து பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.இந்த செய்திகளுக்கு சிம்பு அளித்துள்ள பதிலில், நயன்தாரா என் ஜோடியாக நடிக்க இயக்குனர் பாண்டி ராஜ்தான் தெரிவு செய்தார். இது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை என்கின்றனர்.

எனக்கும், ஹன்சிகாவுக்குமான தொடர்பில் நயன்தாராவுக்கு எந்த ரோலும் இல்லை. ஹன்சிகா மற்ற ஹீரோக்களுடன் நடிப்பதை நான் தப்பு என்று சொல்வது இல்லை. அதுபோல்தான் நயன்தாராவுடன் நடிப்பதை ஹன்சிகா பார்க்கிறார். எங்களுக்கு எதிராக வரும் செய்திகள் கற்பனையானவை. ஹன்சிகாதான் என் காதலி. நயன்தாரா தோழிதான்.

மேலும் ஹன்சிகாவின் அம்மாவுக்கு எங்கள் காதல் பிடிக்கவில்லை என்று செய்தி பரப்புகின்றனர். பிடிக்காமல் இருந்து இருந்தால் நாங்கள் எப்படி அடிக்கடி சந்தித்து பேச முடியும்.எனக்கும், ஹன்சிகாவுக்கும் ஒருவரையொருவர் பிடித்து இருக்கிறது. எனவே நன்றாக இருக்கிறோம்.காதல் தோல்வியான பிறகு நயன்தாராவுடன் எப்படி நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

பழைய டீச்சரை பார்த்தால் ஒரு பரவசமும், சந்தோஷமும் வரும். அதுபோல் முன்னாள் காதலன், காதலிக்காக நிறைய விடயங்கள் பண்ணி இருப்பார்கள். அதற்கான மரியாதையை கொடுக்க வேண்டும். நயன்தாராவை பற்றிய நல்ல விடயங்களை மட்டுமே நினைத்து பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top