எபோலாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு துணை நிற்போம்: பான் கி மூன் உறுதி!

ban ki-moonஎபோலா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு துணை நிற்போம் என ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் உறுதி அளித்துள்ளார்.

எபோலாவால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு பான் கி மூன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கினி நாட்டில் வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட பான் கி மூன், கொனார்கி நகரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சர்வதேச நாடுகளின் உதவியோடு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் எபோலா வைரஸ் பரவுவது குறைந்துள்ளதாகவும், எபோலா இல்லாத நாடு என அறிவிக்கப்படும் வரை கினி அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஐநா வழங்கும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். கினியில் பயணத்தை முடித்து கொண்ட பான் கி மூன், மாலியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top