ஐ படத்துக்கு யு சான்று அளிக்க தணிக்கை குழு மறுப்பு!

I-Movie-Vikram-‘ஐ’ படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இதில் விக்ரம் உடல் எடையை கூட்டியும் குறைத்தும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். நாயகியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கியுள்ளார்.

இதன் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டை அழைத்து வந்தனர். ஐ பட டிரைய்லர் நேற்று முன்தினம் வெளியானது. டிரெய்லரே பிரமாண்டமாக இருந்தது. எனவே படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. பொங்கலுக்கு படம் ரிலீசாகிறது.

இந்நிலையில் ‘ஐ’ படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் ‘யுஏ’ சான்று அளித்தனர். ‘யு’ சான்று பெற்றால்தான் அரசின் கேளிக்கை வரி விலக்கு கிடைக்கும். ‘யு’ சான்று அளிக்கும் படி வற்புறுத்தியும் தணிக்கை குழுவினர் ஏற்கவில்லை. படக்குழுவினரோ ‘யு’ சான்று பெறுவதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இதையடுத்து படத்தை மேல் முறையீட்டு கமிட்டிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். ‘ஐ’ படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top