தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க முடியாது: மாநிலங்களவையில் அமைச்சர் பதில்

Haribhai-Parathibai-Chaudhary-16122014தமிழ் உட்பட வேறு எந்தமொழிக்கும் மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க முடியாது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பார்த்தாபாய் சவுத்ரி தெரிவித்தார்.

மாநிலங்களவையில் நேற்று பேசிய காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு இணை யமைச்சர் ஹரிபாய் பார்த்தாபாய் சவுத்ரி பதில் கூறியபோது, தமிழ் உட்பட வேறு எந்த மொழிக்கும் மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க முடியாது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் எழும் என்று தெரிவித்தார்.

திருவள்ளுவரின் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக அறி விக்க வேண்டும் என்று விடுக்கப் பட்ட கோரிக்கைக்கு, இதுபோல் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வேண்டுகோள் விடுப்பார்கள், இவற்றை ஏற்பது கடினம், திருவள்ளுவர் பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப் பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்று தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top