வரி ஏய்ப்பு செய்ததாக பிசிசிஐ மீது 213 வழக்குகள்: மத்திய அரசு தகவல்!

bcciவரி ஏய்ப்பு செய்ததாக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.பி.எல். மீது 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.பி.எல். அமைப்பு கிரிக்கெட் போட்டிகள் நடத்தியது தொடர்பாக வரி ஏய்ப்பு மற்றும் அன்னிய செலாவணி விதிமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், ”2009–10 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் சேவை வரியில் ரூ.261.64 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.பி.எல். மீது 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், அன்னிய செலாவணி பரிவர்த்தனையில் ரூ.2,148 கோடி விதிமீறல் நடந்து இருப்பதற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top