2-வது டெஸ்ட் போட்டி : ரஹானேவின் அசத்தல் சதத்தால் இந்திய அணி 438 ரன் குவிப்பு!

2-வது டெஸ்ட் போட்டிவெலிங்டனில் நடந்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்துள்ளது. ரஹானே அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி 246 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்திருந்தது. தவான் 71 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

92 ரன்கள் பின்தங்கி இருந்த இந்திய அணி இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடித்து இசாந்த் சர்மா 26 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகள் அடித்தார். மறுமுனையில் நன்றாக விளையாடி வந்த தவான் 98 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை செளதி வீழ்த்தினார். 2 ரன்னில் சதத்தை கோட்டை விட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் கோலி- ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறிது நேரம் கூட நிலைத்து நிற்கவில்லை. வந்த வேகத்தில் ரோகித் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் ரஹேனா, கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியின் ரன்களை உயர்த்தியது. 38 ரன்னில் கோலி ஆட்டம் இழக்க கேப்டன் டோனி களம் இறங்கினார். இவர் ரஹேனாவுடன் ஜோடி சேர்ந்து நன்றாக விளையாடினார்.

ரஹேனா தனது 3வது அரை சதத்தையும், டோனி தனது 29வது அரை சதத்தையும் கடந்தனர். அணியின் ரன் 348 ஆக இருந்த 68 ரன்னில் டோனி ஆட்டம் இழந்தார். இவர் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

டோனியைத் தொடர்ந்து ஜடேஜா 26 ரன்னில் வெளியேறினார். அபாரமாக விளையாடிய ரஹானே தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். இதற்கு முன் 96 ரன்னே அவர் அடித்த அதிகபட்ச ரன்னாகும். 4 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள ரஹானே, 261 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும்.

ஜாகீர்கான் அதிரடியாக விளையாடி 19 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். முடிவில் இந்திய அணி 438 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. தற்போது நியூசிலாந்து அணியை விட 246 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட், செளதி, வாக்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நீஷம் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. தொடக்க வீரர் புல்டன் (1), ஜாகீர்கான் பந்தில் முறையில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து வில்லியம்சன் களம் இறங்கினார். அவர் ரூதர்போர்டுடன் களத்தில் உள்ளார். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 24 ரன்கள் எடுத்துள்ளது. ரூதர்போர்டு 18 ரன்னிலும், வில்லியம்சன் 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top