பிசாசு விமர்சனம்!

pisasu_116375478மிஸ்கின் இயக்கம், பாலாவின் தயாரிப்பு என்பதாலேயே பிசாசு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் டீசர் மற்றும் டிரைலர்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க வைத்திருந்தன. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த விதத்தில் நிறைவேற்றியிருக்கிறது…

பொதுவா பேய் படங்கள்னாலே பேய் அட்டூழியம் பண்ணும். அதிலிருந்து படத்தில் வரும் கதாநாயகன் கதாநாயகி அல்லது வேறு ஏதாவது கதாபாத்திரங்கள் தங்களை தற்காத்துக் கொள்ள முயற்சிப்பார்கள். இப்படித்தான் இருக்கும். ஆனால்… இந்தப் படத்தில வருவது ஒண்ணும் அந்த மாதிரி பிசாசு கிடையாது. இந்த பிசாசு கதாநாயகனுக்கு நல்லது செய்கிறது.

டூவீலரில் வரும் கதாநாயகி பவானி (பிரயாஹா)யை கார் ஒன்று இடித்துத் தள்ளிவிட்டுப் போய்விடுகிறது. இதைப் பார்க்கும் ஹீரோ சித்தார்த் (நாகா) பவானியை காப்பாற்ற அவளை ஆட்டோவில் தூக்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்குப் போகிறான். அங்கு போன அடுத்த விநாடியில் பவானி இறந்து போகிறாள். அவள் மரணம் அவனை வருத்துகிறது. அவளது செருப்பு ஒன்றை எடுத்து வந்து தனது வீட்டில் வைத்திருக்கிறான். இதைத் தொடர்ந்து அவன் வீட்டில் சில அசாதரண நிகழ்வுகள் நடக்கின்றன. அது அத்தனைக்கும் காரணம் பவானியின் ஆவிதான் என்று நினைக்கிறான் சித்தார்த். ஆனால் அந்த ஆவியோ ஒவ்வொரு தடவையும் அவனுக்கு நல்லதையே செய்கிறது. அதை புரிந்து கொள்ளாமல் அந்த பிசாசு கொள்ளிவாய் பிசாசு என நினைக்கிறான் சித்தார்த். ஒரு கட்டத்தில் அந்த பிசாசிடம் இருந்து தப்பிக்க முடிவு செய்து அந்த ஆவியை விரட்ட முயற்சிக்கிறான். அவற்றுக்கு எந்த பலனும் கிடைக்காத நிலையில் புதைக்கப்பட்டிருக்கும் பவானியின் சடலத்தை தோண்டி எடுத்து சடலத்தை எரித்து விட முடிவு செய்கிறான். ஒவ்வொரு தடவையும் நல்லதையே செய்யும் அந்த ஆவியை அவன் புரிந்து கொண்டானா? பவானியின் மரணத்திற்கு காரணம் யார்… என்பதை சொல்கிறது படத்தின் மீதி கதை.

முதல் பாதி முழுவதும் பேய் கதாநாயகனுக்கு நல்லது செய்வதிலேயே ஓடிப் போகிறது. இரண்டாவது பாதியில் பவானியின் இறப்புக்கு காரணமானவனை கதாநாயகன் தேடும் காட்சிகள் இடம் பெறுகின்றன.

கதாநாயகனாக நடித்திருக்கிறார் நாகா. படத்தின் இறுதியில் ஒன்றிரண்டு காட்சிகளில் இவரது முழு முகமும் காட்டப்படுகிறது. மற்றபடி அனைத்துக் காட்சிகளிலும் முகத்தில் முடியைப் போட்டு மறைந்திருக்கிறார்கள். முகபாவனைகளைக் காட்டவேண்டிய பல காட்சிகளில் லாங் ஷாட் வைத்து சமாளித்திருக்கிறார்கள். கதாநாயகியாக பிரயாஹா. பொண்ணு ரொம்ப அழகுதான் என்றாலும் இவரது அழகான முகமும் திரையில் சில காட்சிகளிலேயே வருகின்றன. மற்றபடி இவர் ஆவியாகத்தான் வலம் வருகிறார். பிரயாஹாவின் அப்பாவாக நடித்திருப்பது ராதா ரவியாம். நம்பவே முடியவில்லை. முதலில் சில காட்சிகளில் இவரை அடையாளம் காண்பது சிரமாக இருந்தது. பின்புதான் அடடே… இவர் ராதாரவியாச்சே… என்று தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த அளவுக்கு இருக்கிறது இவரது கேரக்டர். நாகாவின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை யாரு…? நாகாவின் அக்கா மாதிரி இருக்கிற நடிகைக்கு அம்மா வேடம் கட்டிப்புட்டாங்க. எதிர் வீட்டு விநோதினி, எப்பப் பார்த்தாலும் மனைவியை அடித்துக் கொண்டே இருக்கும் கீழ் வீட்டுக் கணவன், கூடவே இரண்டு பேரை வைத்துக் கொண்டு கதைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கும் ஆசாமி, ஆட்டோக்காரர், நாகாவின் நண்பர்கள் என படத்தின் கேரக்டர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே நிறைவு செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு ரவி ராய், ஒளிப்பதிவும் கலர் கிரேடிங்கும் சேர்ந்து பிசாசு படத்திற்கான உணர்வுகளை திரையில் கொண்டு வந்திருக்கின்றன. மிஸ்கின் படங்களில் நிறையவே வரும் வைட் ஆங்கிள் ஷாட் இந்தப் படத்தில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவிலேயே இருக்கின்றன. படத்தில் இடம்பெற்றிருப்பது என்னவோ ஒரே ஒரு பாடல்தான். அதுவும் ரசிகர்களை உருக வைத்திருக்கிறது. பின்னணி இசையில் பேய் படங்களுக்கான இசையைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

இந்தப் படம் சீரியஸ் பேய் படம்தான் என்று சொல்லப்பட்டாலும் படத்தில் உள்ள சில காட்சிகள் காமெடிக் காட்சிகளாகத்தான் இருக்கின்றன. பாட்டில் ஓப்பனரை எடுத்து மறைத்து வைப்பது, பீர் பாட்டிலை எடுத்து உடைப்பது, சிகரட் பாக்கெட்டை எடுத்துவிட்டுப் போவது போன்ற சின்னச் சின்ன வேலைகளையும் இந்த பிசாசு செய்திருக்கிறது. காரணம் அந்தந்த கேரக்டர்கள் உடல் நலன் மீது பேய் வைத்திருக்கும் அக்கறையாம். படத்தை இயக்கியிருக்கிறார் மிஸ்கின். இந்தப் படம் மிஸ்கின் மேக்கிங் ஸ்டைல் பேய் படம்.
நன்றி
http://tamilnews24x7.org/


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top