காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நாளை இறுதிக்கட்ட தேர்தல்!

jammu kashmir election people votingஜம்மு- காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

காஷ்மீர் சட்டசபைக்கு கடந்த 25ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டமாக நாளை பானி, பசோலி, கத்துவா, பிலாவர், காந்திநகர் உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. ராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக 3ஆம் மற்றும் 4ஆம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவுகள் குறைந்த நிலையில், இறுதிக்கட்ட தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலம் ராஜ்மகால், கோடா, சிக்கரிபரா, நலா உள்ளிட்ட 16 தொகுதிகளிலும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. பாரதிய ஜனதா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. மாநிலத்தை கொள்ளையடித்துவரும் ஆட்சியாளர்களை தேர்தல் மூலம் விரட்ட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது பரப்புரையில் குறிப்பிட்டார். ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனும் பாரதிய ஜனதாவை விமர்சித்து பரப்புரையில் ஈடுபட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top