தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

rainfall_chennai_meteorological_department_ forecastவங்கக்கடலில் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தமிழகம்–புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வளி மண்டல காற்று சுழற்சி மேலும் வலுவடைந்து குமரி கடல் பகுதியில் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top