ஹமாஸ் அமைப்பு மீதான தடை நீக்கம்: ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தீர்ப்பு!

ஹமாஸ் ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் விடுதலை அமைப்பை ஐரோப்பிய யூனியன் நிதிமன்றம் புதன்கிழமை நீக்கியது.

எனினும், ஹமாஸ் இயக்கத்தின் சொத்துக்கள் முடக்கம் தொடரும் எனவும் அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

ஊடகங்களிலும், இணையதளங்களிலும் வெளியான செய்திகளின் அடிப்படையில்தான் 2001-ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஹமாஸ் அமைப்பு சேர்க்கப்பட்டது.

ஒரு அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதற்குரிய சட்டப்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்படவில்லை.

விதிமுறைகளின் அடிப்படையில்தான் அந்தப் பட்டியலிலிருந்து ஹமாஸ் அமைப்பின் பெயர் நீக்கப்படுகிறதே தவிர, ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்பது இந்தத் தீர்ப்பில் கூறப்படவில்லை.

பயங்கரவாதப் பட்டியலில் இருந்து ஹமாஸ் நீக்கப்பட்டாலும், அந்த அமைப்பின் சொத்துக்கள் முடக்கம், 3 மாதங்களுக்குத் தொடரும்.

அதற்குள் ஐரோப்பிய யூனியன் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யலாம் என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top