தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை வானிலை - Regional_metrological_centre_chennaiதென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சிதம்பரத்தில் 7 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top