பாகிஸ்தான் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல்: எஸ்.டி.பி.ஐ. கண்டனம்!

பாகிஸ்தான்பாகிஸ்தான் பள்ளி மாணவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்தி உள்ள கொடூரத் தாக்குதலுக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி விடுத்துள்ள கண்டன அறிக்கையில், ”பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளி ஒன்றில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 80க்கும் மேற்ப்பட்ட பள்ளி குழந்தைகள் உட்பட 120 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய, மனிதத் தன்மையற்ற காட்டுமிராண்டித் தனமான இந்த தாக்குதல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எந்த நியாயமான முறையினை கற்பித்தாலும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top