பாகிஸ்தானில் தலிபான்களால் 142 பேர் படுகொலை: வேல்முருகன் கடும் கண்டனம்!

பண்ருட்டி தி.வேல்முருகன்பாகிஸ்தானில் தலிபான்களால் 142 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்துகிற பள்ளிக் கூடத்துக்குள் நுழைந்து ஈவிரக்கமற்ற வகையில் 132 பிஞ்சு குழந்தைகள் உட்பட 142 பேரை தலிபான்கள் படுகொலை செய்து வெறியாட்டம் போட்டுள்ள செயல் உலகை உலுக்கி நெஞ்சை பதற வைக்கிறது..

தேர்வு எழுதிக் கொண்டிருந்த பள்ளி குழந்தைகள், துப்பாக்கிகளோடு வந்த தலிபான்களைக் கண்டு அஞ்சி நடுங்கி மேஜைகளுக்கு அடியில் பதுங்கி உயிர் தப்பிய காட்சிகள் எண்ணிப் பார்க்கவே முடியாத ஒன்று..

எங்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்வினைதான் இது என்றெல்லாம் இப்படிப்பட்ட கொடுஞ்செயலை தலிபான்கள் நியாயப்படுத்திக் கொண்டிருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கவே முடியாத ஒன்று.

எந்த ஒன்றின் பெயராலும் எந்த ஒரு வன்முறை தாக்குதலையும் யாரும் ஆதரிக்கவோ நியாயப்படுத்திவிடவோ முடியாது.

தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி வன்முறை வெறியாட்டங்களுக்கு ரத்த சாட்சியங்களாகிப் போன பெஷாவர் பிஞ்சுக் குழந்தைகளுக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top