தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் அமைச்சரவை 16–ந்தேதி விரிவாக்கம்!

KChandraShekhar_Rao_PTI12ஆந்திராவில் இருந்து பிரிந்து நாட்டின் 29–வது மாநிலமாக உதயமான தெலுங்கானாவில் நடந்த முதல் சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்–மந்திரியாக அக்கட்சி தலைவர் சந்திர சேகரராவ் கடந்த ஜூன் மாதம் பதவி ஏற்றார்.

மொத்தம் 12 பேர் கொண்ட அவரது அமைச்சரவை முதல்– முறையாக வருகிற 16–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இது தொடர்பாக முதல்– மந்திரி சந்திரசேகரராவ் கவர்னர் நரசிம்மனை நேற்று சந்தித்து பேசினார். சமீபத்திய டெல்லி பயணம், தண்ணீர் மற்றும் மின்சார பகிர்மான பிரச்சினை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பிரச்சினை ஆகியவை குறித்து கவர்னரிடம் விவாதித்த சந்திர சேகரராவ் மந்திரி சபை விஸ்தரிப்பு குறித்து பேசினார். புதிய மந்திரிகள் பட்டியலையும் அவரிடம் கொடுத்ததாக தெரிகிறது.

16–ந்தேதி காலை 11 மணிக்கு புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா இருக்கும் என கூறப்படுகிறது.

மந்திரி சபையில் 6 புதிய மந்திரிகள் இடம் பெறக்கூடும் என தெரிகிறது. இதுதவிர தற்போதைய மந்திரிகள் சிலரின் இலாகா மாற்றி அமைக்கப்படுகிறது. சில எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உள்பட சில பதவிகள் வழங்கப்பட உள்ளது.

புதிய மந்திரிகள் பட்டியலில் கம்மம் மாவட்டம் தும்மல நாகேஸ்வரராவ், ஜூபல்லி கிருஷ்ணாராவ், லட்சுமரெட்டி, இந்திராகரன் ரெட்டி ஆகியோர் பெயர்கள் அடிபடுகிறது. கொப்பல ஈஸ்வர் தலைமை கொறடாவாக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

சந்திர சேகரராவ் மந்திரி சபையில் கம்மம், மெகபூப் நகர் மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. அதே போல் பெண்களும் இல்லை. எனவே இவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் கட்சி தாவி வந்தவர்களுக்கு பதவி கொடுக்கும் வகையிலும் மந்திரி சபை விஸ்தரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top