கட்டாய மதமாற்ற விவகாரம்: 17 ஆம் தேதி மாநிலங்களவையில் விவாதம்

parliamentகட்டாய மதமாற்றம் நடந்ததாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து வரும் 17 ஆம் தேதி மாநிலங்களவையில் விவாதம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

ஆக்ரா, அலிகார் உள்ளிட்ட இடங்களில் நடந்ததாகக் கூறப்படும் கட்டாய மதமாற்ற சம்பவம் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் தொடர்ந்து குரல் எழுப்பினர். இதையடுத்துப் பேசிய நக்வி, இந்த விவகாரம், விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top