சீனாவின் கன்பூசியஸ் அமைதிக்கான விருது பிடல் காஸ்ட்ரோவுக்கு வழங்கப்பட்டது!

பிடல் காஸ்ட்ரோசீனாவின் அமைதிக்கான கன்பூசியஸ் விருது, கியூபாவின் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ வுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலக அமைதிக்கு பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய பங்களிப்பை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசைப் போன்று சீன அரசு சார்பில் கன்பூசியஸ் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. காஸ்ட்ரோ சார்பில் சீனாவில் பயிலும் கியூபா மாணவர் ஒருவர் கடந்த செவ்வாய்க் கிழமை அப்பரிசை பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, இந்த பரிசுக்கான தேர்வு பட்டியலில் பிடல் காஸ்ட்ரோ, தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உள்ளிட்ட 20 பேர் இடம்பெற்றிருந்தனர். விருது தேர்வுக் குழு, பிடல் காஸ்ட்ரோவை தேர்ந்தெடுத்தது.

கியூபாவில் புரட்சி நடத்தி ஆட்சி மாற்றத்தை பிடல் காஸ்ட்ரோ கொண்டு வந்தார். அதே சமயம், தான் ஆட்சியில் இருந்த காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்வு காண முயற்சித்தார் என்று தேர்வுக்குழு, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top