தமிழகத்தின் அநேக இடங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை வானிலை - Regional_metrological_centre_chennaiதமிழகத்தின் அநேக இடங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை காலம் வருகிற 31-ந் தேதி வரை உள்ளது. பொதுவாக, தென் மேற்கு பருவ மழையை விட, வட கிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகத்தில் அதிக மழை பெய்யும். இந்த ஆண்டு, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வட கிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்துள்ள நிலையில், சென்னை உள்பட வட மாவட்டங்களில் போதுமான அளவு மழை பெய்யவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், ஆங்காங்கே அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று அதிகாலை மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரத்திலும் சற்று பலத்த மழை பெய்தது.

இந்நிலையில், தமிழகம்-இலங்கை இடையே வங்க கடலில் இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று (வியாழக்கிழமை) தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், சென்னை உள்ளிட்ட வட சென்னை மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top