சாம்பியன்ஸ் டிராபி: நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா

4781_india-netherland6சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்தது. ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று இந்தியாவும் நெதர்லாந்தும் மோதின.

ஆரம்பம் முதலே அபாரமாக ஆடியது இந்தியா. 33-வது நிமிடத்தில் இந்தியாவின் சுனில் முதல் கோல் அடித்தார். அடுத்த மூன்று நிமிடங்களில் நெதர்லாந்து கோல் அடித்து சமன் செய்தது. கடைசி கால் மணி நேர ஆட்டத்தின் 47 மற்றும் 49-வது நிமிடங்களில் இந்திய அணி அட்டகாசமாக ஆடி கோல்கள் அடித்தது. 58-வது நிமிடத்தில் நெதர்லாந்து மீண்டும் கோலடித்தது. மிகவும் பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

மற்ற ஆட்டங்களில் அர்ஜெண்டினா 3-0 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. இங்கிலாந்து பெல்ஜியம் இடையிலான ஆட்டம் 1-1 என டிரா ஆனது. ஆஸ்திரேலியா 3-0 என பாகிஸ்தானை வீழ்த்தியது. நாளை காலிறுதி ஆட்டம் நடைபெறுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top