பி.சி.சி.ஐ. சீனிவாசன் செயல்பாடு : உச்சநீதிமன்றம் கருத்து!

icc srinivasanபி.சி.சி.ஐ. தலைவராக இருந்த சீனிவாசன் ஆதாயம் தரும் வகையில் செயல்படவில்லை என்பதை ஏற்பது கடினம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தபோது, ஓய்வு பெற்ற முகுல் முத்கல் கமிட்டி அறிக்கையில் சீனிவாசனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை என முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ”தலைவர் பதவியில் இருப்பவர் எந்தவிதமான பிரச்னைகளிலும் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரண்டு பதவியில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், அவற்றை தவிர்த்திருக்க வேண்டும்.

ஆனால், பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த சீனிவாசன், ஐ.பி.எல். அணி நடத்துகிறார். எனவே, இவர் எப்படி தனது சொந்த அணியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, இவர் ஆதாயம் தரும் வகையில் செயல்படவில்லை என்பதை ஏற்பது கடினமாக இருக்கிறது” என்ற நீதிபதிகள், அடுத்த விசாரணையை இன்றைக்கு (9ஆம் தேதி) ஒத்தி வைத்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top