பாலா படத்தில் கரகாட்ட காரியாக வலம் வரவுள்ளார் வரலட்சுமி !

வரலட்சுமி பாலா படத்தில் நடிகர் சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமி நடிக்கிறாராம். இயக்குனர் பாலா தனது பரதேசி திரைப்படத்திற்குப் பிறகு கரகாட்டத்தை மையப்படுத்தி புதிய படமொன்றை இயக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இதில் நாயகனாக சசிக்குமார் நடிக்கிறார். படத்திற்கான இசை இசைஞானி இளையராஜா. பெயரிடப்படாத இப்படத்தில் முதலில் நடிகை ஸ்ரேயா நடிக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்தக் கரகாட்டக்காரி கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிப்பார் என்று தெரிகிறது.

கரகாட்டம் சம்பந்தமான கதையை தயார் செய்துவரும் பாலா, அதில் நடனமாடத் தெரிந்த ஒரு நடிகை கிடைத்தால் தான், அந்த கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறார்.அதற்கேற்ற மாதிரி நடனம் ஆடத்தெரிந்த வரலட்சுமியிடம் இந்தக்கதையையும் அவரது கேரக்டரையும் பற்றிச் சொல்லவே துள்ளிக்குதித்து விட்டாராம்.

முன்னதாக ஸ்ரேயா, ஸ்ராவந்தி ஆகிய நடிகைகளையும் வைத்து டெஸ்ட் ஷூட் செய்து பார்த்த பாலா இவர்கள் இக்கேரக்டருக்கு பொருந்த மாட்டார்கள் என முடிவு செய்துள்ளாராம். எனவே தான் வரலட்சுமியை நாடியுள்ளாராம். விரைவில் இச்செய்தியை அதிகாரப் பூர்வமாக தெரிவிக்க உள்ளாராம் பாலா.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top