நாடு முழுவதும் இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிப்பு!

FL08_NOORANI_BABRI_babri masjidபாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

வழிபாட்டுத்தலங்கள், ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் விமானநிலையத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவற்றிற்கு வரும் அனைவரும் முழுமையான பரிசோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணி மேற்கொண்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top