தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.

தமிழக சட்டமன்றம்தமிழத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

இதன்படி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில், இதுவரை கணக்கு மற்றும் கருவூலங்கள் துறை ஆணையராக பதவி வகித்த வீரசண்முகமணி இனி தொழிலாளர் நல ஆணையராக தனது பொறுப்பை வகிக்க உள்ளார்.
தொழிலாளர் நல ஆணையரும், சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநருமான சந்திரமோகன், சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநராக மட்டும் செயல்பட உள்ளார்.

வேளாண்மைத் துறை கூடுதல் செயலர், வாசுகி, நில அளவைத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில் துறை இணைச் செயலாளர் எம்.எஸ்.சண்முகம், தமிழ்நாடு சுகாதார முறைகள் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் உதவி ஆட்சியர் சந்திர சேகர் சகாமுரி அரியலூர் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஐபிஎஸ் அதிகாரிகள், சென்னை பெருநகர காவல்துறை, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன், சென்னை நிர்வாக‌ப்பிரிவு ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த ஆபாஷ் குமார், சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி சரக டி.ஐ.ஜி அமல்ராஜ், சேலம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் சரக டி.ஐ.ஜி. சஞ்சய் குமார், தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.காத்திருப்போர் பட்டியலில் இருந்த உதவி எஸ்.பி., நிஷா சேகர், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் உப கோட்டத்தின் உதவி எஸ்.பி.யாக பதவி வகிக்க உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top