கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

கொளத்தூர் மணிதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி, சேலத்தில் வருமான வரித்துறை அலுவலகம் முன் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இதனால் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டார். இதையடுத்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது கொளத்தூர் மணி மீதான கைது நடவடிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top