வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

raghuram rajanகுறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மும்பையில் இன்று நடந்த கடன் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. உயர் பணவீக்கத்தின் தாக்கம் இன்னும் நீடிப்பதால் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்தார்.

வட்டி குறைக்காததை வைத்து ரிசர்வ் வங்கி, வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரவில்லை என கருதக்கூடாது என்றும் வளர்ச்சிக்கு தேவையான சூழலை தாங்கள் ஏற்படுத்தி வருவதாகவும் ராஜன் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top