தென்மாநில வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்!

bank employees-STRIKEதென்மாநிலங்களில் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

வங்கி ஊழியர் சங்கங்கள் தரப்பில் 23 சதவிகித சம்பள உயர்வை வலியுறுத்திய நிலையில் 11 சதவிகிதம் மட்டுமே வழங்க அரசு முன் வந்துள்ளது. இதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் 23 ஆயிரம் வங்கிக் கிளைகளில் பணியாற்றும் ஒன்றரை லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், 6 தென் மாநிலங்களில் இன்று வேலை நிறுத்தம் நடக்க உள்ள நிலையில் வடக்கு, கிழக்கு, மேற்கு மாநிலங்களில் அடுத்தடுத்த நாட்களில் வேலை நிறுத்தம் நடக்க உள்ளது என்றும் அவர் கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top