முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: கேரள மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை!

mullaiperiyaruமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கேரள அரசு தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என கடந்த மே மாதம் 7 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, கடந்த ஜூலை 1 ஆம் தேதி கேரள அரசு சார்பில் மறுசீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவினர், அணை தொடர்பான தொழில்நுட்பங்களை கவனத்தில் கொள்ளவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

அந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன், இன்று பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top