காஷ்மீர், ஜார்கண்டில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Kashmir-elections-APகாஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைகளுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது. இங்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

ஜம்முவில் நிலவி வரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களை சந்தித்து இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 18 தொகுதிகளிலும் வாக்கு சேகரித்தனர். இந்தத் தேர்தலில், ஜம்முவில் மொத்தம் 90 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில் ஆளும் தேசிய மாநாட்டு கட்சிக்கும், மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையேதான் நேரடிப்போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இரண்டாம்கட்டமாக 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் இந்த 2 மாநிலங்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top