தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை வானிலை - Regional_metrological_centre_chennaiதென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே கடந்த வாரம் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார்வளைகுடா மற்றும் அதனை சுற்றி உள்ள கடல் பகுதியில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்க கடலில் நீடித்தது.

இதன் காரணமாக வட கடலோர தமிழகம், தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. சென்னையில் லேசான மழைதான் பெய்தது. விமான நிலையத்தில் 2.6 மி.மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 1.6 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.

தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு நிலையாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று மழை பரவலாக நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டம் மற்றும் கடலோர தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் ஆனாலும் மழை படிப்படியாக குறையும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top