ஜார்க்கண்டில் பலத்த பாதுகாப்புக்கிடையே நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

jammu and kashmir assembly election 2014ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் இரண்டாம் கட்டத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் 7 மாவட்டங்கள் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்தது என்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாளைய தேர்தலில் சுமார் 44 லட்சத்து 31 ஆயிரத்து 900 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சுமார் 5 ஆயிரத்து 48 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர்கள் அர்ஜூன் முண்டா மற்றும் மதுகோடா உட்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த 25ஆம் தேதி 13 தொகுதிகளுக்கு, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 62 சதவிகித வாக்குகள் பதிவாகின.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top