நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது!

இந்தியா– நியூசிலாந்துநியூசிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா அணி விளையாடி வருகிறது.ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

இந்நிலையில் இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்க இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்ததால் டோனி தலைமையிலான இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.

வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்று 2½ ஆண்டுகள் ஆகிறது. 10 தோல்வியை சந்தித்த இந்தியா வெலிங்டன் டெஸ்டிலாவது வெற்றி பெற்று இழந்த பெருமையை மீட்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் டெஸ்ட் தொடரை சமன் செய்யாவிட்டால் தரவரிசையிலும் பின்னடைவு ஏற்படும். இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

இந்த சுற்றுப்பயணத்தில் இதுவரை இந்திய அணி ஒரு வெற்றி கூட பெறவில்லை. நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சவாலானதே. வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடுவது அவசியமானதாகும்.நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ரோஸ் டெய்லர் நாளைய போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிவாக டாம் லதம் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் திகழும் நியூசிலாந்து இந்த டெஸ்டிலும் வென்று இந்தியாவை ‘ஒயிட் வாஷ்’ செய்யும் ஆர்வத்தில் இருக்கிறது.இரு அணிகளும் இது வரை 53 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இந்தியா 18 டெஸ்டிலும், நியூசிலாந்து 10 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 25 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ் சானலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top