சிபிஐ விசாரணைக்குழு அறிக்கையை தெரியப்படுத்த பேரறிவாளன் கோரிக்கை!

Perarivalanராஜீவ்காந்தி கொலை வழக்கில் மாதந்தோறும் தாக்கல் செய்யப்படும் சி.பி.ஐ. அறிக்கையில் உள்ளவற்றை தெரிவிக்க வேண்டும் என பேரறிவாளன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. பல்நோக்கு விசாரணைக்குழு மாதந்தோறும், முருகன், சாந்தன், பேரறிவாளன் குறித்து சீலிட்ட உரையில் அறிக்கை தாக்கல் செய்து வருகிறது.

இந்நிலையில், சி.பி.ஐ. பல்நோக்கு விசாரணைக்குழு அறிக்கையில் உள்ளவற்றை தெரிவிக்க வேண்டும் என மாநில தலைமை தகவல் ஆணையர் கே.எஸ்.ஸ்ரீபதிக்கு, பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top