மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மாநகர பஸ் சேவை

metro railசென்னையில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரெயில் இயங்க உள்ளது.

கோயம்பேடு – ஆலந்தூர் இடையே உள்ள மெட்ரோ ரெயில் பாதையில் கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈகாட்டுத்தாங்கல், ஆலந்தூர் ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

மெட்ரோ ரெயில் பயணிகள் மாநகர பஸ்களையும் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மாநகர பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் மாநகர பஸ்களை இயக்குவது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் பஸ் வழித்தடங்கள் அமைய உள்ளன.

மெட்ரோ ரெயில் நிலையங்கள் அனைத்தும் மாநகர பஸ்கள் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து முக்கிய பஸ் நிலையங்களை இணைக்கும் வகையில் சிறிய பஸ்களை அதிக எண்ணிக்கையில் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

மெட்ரோ ரெயில்களின் எண்ணிக்கையை பொருத்தும், பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டும் தேவையான மாநகர பஸ்கள் விடப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மெட்ரோ ரெயில் பயணிகள் அதே டிக்கெட் மூலம் மாநகர பஸ்களிலும் பயணம் செய்யும் வகையில் ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. மெட்ரோ ரெயில் ஓடத்தொடங்கியதும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top