தி.வி.க நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்: காவல்துறையினரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

பிரபாகரன் பிறந்தநாள் விழாமயிலாப்பூரில் பிரபாகரன் அவர்களின்  பதாகைகளை நீக்கியதை கண்டிதத்த திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ‘முழக்கம்’ உமாபதியின் மீது காவல்துறையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

தி.வி.க நிர்வாகி தாக்குதலுக்கு  கடும் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தாக்குதல் நடத்திய காவல்துறையினரை  கைது செய்யக் கோரி பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில், இத்தாக்குதலை கண்டித்து சேலம், திருச்செங்கோடு, மன்னார்குடி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திராவிடர் விடுதலைக் கழகம்

திருச்செங்கோடு கண்டன ஆர்ப்பாட்டம்

10356421_752552431490329_2692955932457640281_n (1)

கிருஷ்ணகிரி கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தின் போது சென்னை E-4 அபிராமபுர காவல் துறையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top