விஜயகாந்த் மீது தமிழக அரசு மேலும் ஒரு அவதூறு வழக்கு!

விஜயகாந்த்தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பால்வளத்துறை அமைச்சர் ரமணா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கை இன்று தொடர்ந்துள்ளார்.

அதில், பால் கொள்முதல் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்றும், அதில் அமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு கருத்துகள் உள்ளன என்றும், இதனால் அவர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top