விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

vijayakanthதஞ்சை ஆப்ரகாம்பண்டிதர் சாலையில் கடந்த 2012–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் ஏ.குப்புசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஆஜராகாமல் இருக்க விஜயகாந்த் ஏற்கனவே விலக்கு பெற்றுள்ளார். இந்தநிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே வழக்கில் ஆஜராகாமல் இருக்க விலக்கு பெற்றுள்ளதால் விஜயகாந்த் விசாரணையின் போது ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல்கள் மாதவன், செந்தில்குமார் ஆகியோர் ஆஜரானார்கள். இதையடுத்து இந்த வழக்கு அடுத்தமாதம் (டிசம்பர்) 22–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top