தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை வானிலை - Regional_metrological_centre_chennaiகாற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து, கடலோர மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top